மதிமுக, விசிக வெற்றி பெற்ற தொகுதிகள் எவை?

 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. இதில்  திமுக கூட்டணி 159 இடங்களையும் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது.


பெரும்பான்மையான இடங்களை திமுக வென்றுள்ளதால் 10 வருடங்கள் கழித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ளது.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அரியலூர் தொகுதியில் சின்னப்பா, மதுரை தெற்குத் தொகுதியில், பூமிநாதன், வாசுதேவநல்லூர் தொகுதியில் சதன் திருமலைக்குமார், சாத்தூர் தொகுதியில் ரகுராமன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக 2006 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 6 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றிருந்தது.

இதேப்போன்று  திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வென்றுள்ளது. நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷாநவாசும், திருப்போரூரில் எஸ்.எஸ்.பாலாஜியும், செய்யூரில் பாபுவும், காட்டு மன்னார் கோயில் தொகுதியில் சிந்தனைச் செல்வனும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

வானூர் மற்றும் அரக்கோணம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோல்வியடைந்துள்ளது. கடைசியாக 2006ம் ஆண்டு இரு சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா