மரத்தடியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: தனியார் மருத்துவமனைக்கு சீல்!

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் மரத்தடியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் எதிரில்  தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது.
இங்கு மருத்துவராக உள்ள சிவரஞ்சனி என்பவர்  கொரோனா நோய் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றார்.  கிளினிக்கில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத காரணத்தினால் மருத்துவமனையின் எதிரில் உள்ள மரத்தடியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் ஆரணி அருகே உள்ள தச்சூர் பொறியியல் கல்லூரியில் தற்காலிக கொரோனா வார்டு உள்ளிட்டவைகளில்  கொரோனா பாதித்தவர்கள் அதிகளவில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இங்கு போதிய இடம் இல்லாததால்,  தனியார் மருத்துவமனையை கொரோனா நோயாளிகள் தேடும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், மரத்தடியில் கொரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து  செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கண்ணகி தலைமையில் மருத்துவ குழு மற்றும் போலீசார் வருவாய் துறையினர் குழல் கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் கிளினிக்கில்இருந்த சுமார் 12 நோயாளிகளை திருவண்ணாமலை மற்றும் ஆரணி செய்யார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்