தனியார் மருத்துவமனைகளை அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக வழக்கு

 


சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கொரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.


கேரளாவில் கொரோனா சிகிச்சைக்கு அம்மாநில அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ரெம்டெசிவர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலில்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
நிர்வாணப்படுத்தி டான்ஸ் ஆடச்சொல்லி மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர்... இந்தக் கொடுமை எங்கு தெரியுமா?
Image
ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு!!
Image
வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுகிறதா ?அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
Image
மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து ‘நான் கடவுள்’ பாணியில் காசி அகோரிகள் நடத்திய சடங்கு : பீதியை கிளப்பிய விநோத பூஜை!!
Image