ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

 


தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக-வுக்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதற்கு மு.க.ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளுடனும், அதிமுக - பாஜகவுடனும் களம் கண்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது திமுக. அதோடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 

50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக அரியணை ஏறவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதையடுத்து அவருக்கு தேசிய தலைவர்களும், திரைப்பிரபலங்களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், ”இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்