திருப்பூர் மாவட்டத்தில் மின்சார வாரிய தொமுச சார்பில் மே தினவிழா
திருப்பூர் பகுதிகளிலுள்ள மின்சார வாரிய அலுவலகங்களில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொமுச சார்பில் கொடியெற்று விழா நடைபெற்றது.
மே தின விழாவை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுகழக செயலாளர் க.செல்வராஜ் அவர்களின் ஆலோசனைப்படி மின்சார வாரிய தொமுச சார்பில் திருப்பூர் பி.என். ரோடு மேட்டுபாளையம் பஸ் நிறுத்தம் எதிரிலுள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில் தொமுச பேரவை கொடியை திருப்பூர் வடக்கு மாநகர பொருப்பாளர் தினேஷ்குமார் ஏற்றி வைத்து மின்சார வாரிய தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொமுச பேரவை மாநில துணைச் செயலாளர் டி.கே. டி. மு.நாகராசன் , மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜீவா சிதம்பரசாமி , பொது செயலாளர் ஆர் ரங்கசாமி, அண்ணா காலனி பகுதி செயலாளர் செல்வராஜ், 30 வட்ட செயலாளர் நித்தியானந்தம், மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன், பெருமாநல்லூர் செந்தில் (எ) பழனிச்சாமி, பாண்டியன் நகர் பகுதி திமுகழக செயலாளர் வே. ஜோதி, ஆர் கே நகர் மின்சார வாரிய தொமுச ஜோதாபாசு, தலைவர் ரத்திணசாமி, பழனிசாமி, பாலமாதேஷ், ஹோட்டல் தொமுச மகேஷ், ராஜ் மோகன் , மகாதேவன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகரம் போயம்பாளையம் ஆர் கே நகர் மின்சார வாரிய அலுவலகம் அருகில் தொமுச பேரவை கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கங்கா நகர் வி வி ஜீ .காந்தி கலந்து கொண்டு கொடியெற்றி இனிப்பு வழங்கினார்.
இதில் 8 வது வட்ட செயலாளர் வெள்ளைசாமி,மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி.அ.சரவணன், ஜோதிபாசு, மற்றும் நிர்வாகிகள் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆத்துபாளையம் பகுதியிலுள்ள வேலம்பாளையம் துணை மின் நிலையம் முன்பும், திருப்பூர் மாநகரம் 5 வது வட்டம் அனுப்பர்பாளையம் உபகோட்ட மின்வாரிய அலுவலகம் முன்பும் தொமுச பேரவை கொடி ஏற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 5 வது வட்ட திமுகழக செயலாளர் ரத்தினசாமி கலந்து கொண்டு கொடி யெற்றி இனிப்பு வழங்கினார் இதில் அமைப்புசாரா தொமுச பொது செயலாளர் ஆர்.ரங்கசாமி , செயலாளர் ஈ.பி.அ.சரவணன், மற்றும் நிர்வாகிகள் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவினாசி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர்
அலுவலகம் முன்பு மே தினக் கொடியெற்று விழா நடை பெற்றது செயலாளர் ஈ.பி. அ.சரவணன் தொமுச பேரவை கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவினாசி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். பெருமாநல்லூர் மின்வாரிய துணை மின் நிலையம் முன்பு தொமுச பேரவை கொடி ஏற்றப்பட்டது .இதில் தொமுச நிர்வாகிகள் பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சி.டி.சி.வேலுச்சாமி, கலந்து கொண்டு தொமுச பேரவை கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ தொமுச முருகன், பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற 1 வது வார்டு மெம்பர் துரை, பெருமாநல்லூர் மின்சார வாரிய தொமுச சினிவாசன், ஜெயபால், பூபதி, மற்றும் நிர்வாகிகள் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கொடி ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்சார வாரிய தொ.மு.ச செயலாளர் அ.சரவணன் செய்திருந்தார்.