வாழ்வின் எல்லா நிலையிலும் நிறைந்திருப்பவர் தாய் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து

 


அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது. மனித இனங்களுக்கு மட்டுமல்ல, உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய் என்பது தன்னிகரில்லாத ஒன்று. மனிதர்கள் வேண்டுமென்றால் தாயுடன் இணைந்து தந்தை என்ற குடும்ப கட்டமைப்பில் வாழ்ந்துவருகிறார்கள். ஆனால், பறவைகள், விலங்குகள், ஊர்வன என உலகின் அனைத்து உயிர்களும் தாயிலிருந்து பிறக்கின்றன. தாயின் அரவணைப்பிலேயே வளர்கின்றன.


எல்லா உயிரினங்களும் தாய்மை தன் குட்டிகளை அத்தனை உயிரைக்கொடுத்து பாதுகாக்கும். தன்னைவிட வலிமையான பருந்துகளிடமிருந்து குஞ்சுகளைக் காக்க சண்டையிடும் தாய்கோழிகளும், நாய்களிடமிருந்து குட்டிகளைக் காக்க சண்டையிடத் துணியும் தாய்ப் பூனையும் பார்த்திருப்போம். கலங்கமில்லா, எதிர்பார்ப்பிலா ஒரு பேரன்பு தாயின் அன்பு. அத்தகையை நினைத்து போற்றி மகிழ அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் அவர்களது தாய்க்கு மரியாதை செலுத்தி அன்பை வெளிப்படுத்திவருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தாய் 'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு. எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள். மகளிர் நலத்துடன் - அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)