‘அரசு உணவகத்தில்’ தகராறு செய்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை - கட்சியில் இருந்தும் நீக்கம்!

 


சென்னை முகப்பேர் கிழக்கு ஜெஜெ நகரில் உள்ள அரசு உணவகத்தில் தகராறு செய்ததோடு பெயர் பலகையையும் நீக்கி இருக்கிறார்கள். இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலானது.

இதனை அறிந்து, உணவகத்தில் பிரச்னையில் ஈடுபட்ட சென்னை தெற்கு மாவட்டம் 92வது வட்டத்தைச் சேர்ந்த நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய இருவரும் தி.மு.கவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பகுதி செயலாளர்கள் கொடுத்த புகாரின் படி அநாவசிய செயலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் தி.மு.கவில் அவர்கள் எந்த பொறுப்பிலும் இல்லையென்றாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை தி.மு.க தென்சென்னை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் உணவகத்தில் மீண்டும் பெயர் பலகையும் உடனடியாக வைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.கழகத்தின் இந்த துரிதமான நடவடிக்கையை மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.