ஒரு திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழ் பெற முடியும்: தமிழக அரசு

 


திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழ் பெற முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிற மாவட்டங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழை பெற முடியும்.

அந்தவகையில், மணமகள், மணமகன், தாய், தந்தை, போன்றோரே இ-பதிவு செய்ய முடியும். இ-பதிவின்போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு, ஒரு இ-பதிவு சான்றிதழ் மட்டுமே பதிய முடியும். ஒரு திருமணத்திற்கான இ-பதிவில் பத்திரிகையில் உள்ள அனைவரின் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

அனைத்து வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண் பதிவிட வேண்டும். அதேபோல், பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயர், ஏதேனும் ஒரு அடையாள அட்டையும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போலி திருமண பத்திரிகையை தயார் செய்தால் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, திருமணங்களுக்கு செல்ல இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பல இடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதால் இ-பதிவு பக்கத்தில் விருப்பத்தேர்வில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சில விதிமுறைகளுடன் இன்று சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்