புதுச்சேரியில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி

 


புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதில் அதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த கட்சி சார்பில் அன்பழகன் உப்பளம் தொகுதியிலும், பாஸ்கர் முதலியார்பேட்டை தொகுதியிலும், வையாபுரி மணிகண்டன் முத்தியால்பேட்டை தொகுதியிலும், அசனா காரைக்கால் தெற்கு தொகுதியிலும், ஓம்சக்தி சேகர் உருளையன்பேட்டை தொகுதியிலும் ஆகியோர் போட்டியிட்டனர்.

உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி 13,227 வாக்குகள் பெற்றார். அன்பழகன் 8,501 வாக்குகள் பெற்று 4,726 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

முதலியார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் 14,785 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஸ்கர் 10,747 வாக்குகள் பெற்று 4,038 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிரகா‌‌ஷ் குமார் 8,655 வாக்குகள் பெற்றார். வையாபுரி மணிகண்டன் 7,658 வாக்கு பெற்று 997 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதியில் ஓம்சக்தி சேகர் போட்டியிட்டார். அந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான நேரு 9,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கோபால் 7,178 வாக்குகள் பெற்று 2ஆவது இடமும், 1,681 வாக்குகள் பெற்று ஓம்சக்தி சேகர் 3ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

இதேபோல, காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாஜிம் 17,042 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அசனா 5,271 வாக்குகள் பெற்று 11,771 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதனால், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தோல்வி அடைந்து இருப்பது அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்