காவல்துறையினர் குடும்பங்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப தலைமையில் நடைபெற்றது.

 


மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினர், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மருத்துவமனை மருத்துவர் தழிழரசி ஆகியோர் தலைமையிலானா மருத்துவக்குழுவினர் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு முகாமை
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜிபிரவீன்குமார் அபிநபு இ.கா.ப துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் தொற்றியிருந்தது தங்களை காத்துக்கொள்ள முடியும் என்றும் அனைவரும் தடுப்பூசியினை போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப, திருநெல்வேலி மாநகரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் சீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சிசில், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் திரு முத்தரசு,திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் சுடலைமுத்து (பொறுப்பு) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் காவல் துறையினர்,காவல் துறையினரையினரின் குடும்பங்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பலர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை