பள்ளிக்கல்வி இயக்குனர் எனும் பதவியினை நிர்வாகச்சீர்திருத்தம் எனும் பெயரில் ரத்து செய்து ஆணையமாக மாற்ற முடிவெடுத்து, தமிழக அரசு

 


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

புதிய அரசு பதவியேற்றதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

பொதுவாக பள்ளிக் கல்வித்துறைக்கு இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் புதியதாக ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு இருப்பதாக தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தார். இதயைடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்த கண்ணப்பன் ராஜினாமா செய்தார்.

இதனிடையே பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டுவிட்டதா? என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின.மேலும் இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்யக் கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.