பேரிடர் மீட்பு படையை உஷார் படுத்துக - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

 


அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள "டவ் தே " புயல், வரும் 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18- ந் தேதி வரை கன மழை முதல் மிக கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளத் அதுல்யா மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், மழை அதிகம் பெய்யக்கூடிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான அளவு அருவை இயந்திரங்கள் கையிருப்பு வைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்