ஆட்டோவை மினி ஆம்புலன்ஸாக மாற்றிய ஜாவித் கான்!!!

 போபாலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தனது மனைவியின் நகைகளை விற்று தனது ஆட்டோவை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக சேவை செய்து வரும் ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 


 மத்திய பிரதேசத்திலுள்ள போபால் நகரில்  கடந்த 18 ஆண்டுகள் ஆக  ஆட்டோ ஒட்டி வருபவர் ஜாவித் கான். கொரோனா நோய்தொற்று  காரணமாக நாளுக்கு நாள் மக்கள் உயிரிழப்பதை பார்த்த இவர் , தன் வாழ்வாதாரமான  ஆட்டோவை ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட இலவச ஆம்புலன்ஸாக  மாற்றியுள்ளார்.

ஆம்புலன்ஸ் இன்றி  அவசரமாக  உதவி தேவைப்படுவோரை  தேடிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவுகிறார். இந்த மினி  ஆம்புலன்ஸுக்காக ஒரு நாளைக்கு  600 ரூபாய் செலவு ஆகும் நிலையில் ,  அதனை ஈடு செய்ய தனது மனைவி அவரது நகை அளித்து உதவியுள்ளார். இந்த சேவையை தொடர்ந்து செய்வதற்காக பயணிகளுக்காக ஆட்டோ ஒட்டியதை நிறுத்தி விட்டார். தன் இலவச ஆம்புலன்ஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகளை வெளியிட்டு வருவது மட்டுமன்றி ,  கடந்த 3 நாட்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு ஆக்சிஜன் வழங்கி மருத்துவமனைகளில் அனுமதித்து உள்ளார். சுயநலமின்றி பிறர்நலத்தை முன்னிறுத்தி சேவை செய்யும் இந்த ஆட்டோ ஓட்டுனரை  நெட்சன்கள்  பாராட்டி வருகின்றனர்.