போயம்பாயையம் பகுதியிலுள்ள ரேஷன்கடைகளில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி வழங்கும் விழா
திருப்பூர் வடக்கு போயம்பாளையம் பகுதியிலுள்ள சக்திநகர், தொட்டிபாளையம், பழனிச்சாமி நகர் , ராஜாநகர், கங்காநகர், அவினாசி நகர் ,நஞ்சப்பா நகர் உள்ளிட்ட ரேஷன்கடைகளில் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வடக்கு மாநகர பொருப்பாளர் ந. தினேஷ்குமார் கலந்து கொண்டு அவினாசி நகர் சக்திநகர் உள்ளிட்ட ரேசன்கடைகளில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பழனிச்சாமி நகர், ராஜாநகர் உள்ளிட்ட ரேசன் கடைகளில் 8 வது வட்ட செயலாளர் வெள்ளைசாமியும் கங்காநகர் ரேசன்கடையில் வி.வி ஜி. காந்தியும், மின்சார வாரிய தொமுச செயலாளர் அ.சரவணனும் தொடங்கி வைத்தனர்.
இதில் வடக்கு மாநகர பொருப்பாளர் ந.தினேஷ்குமார் அவர்களும், 7 வட்ட திமுகழக செயலாளர் தயானந்தம், 8 வது வட்ட திமுகழக செயலாளர் வெள்ளைசாமி, கங்கா நகர் வி.வி.ஜீ. காந்தி, மின்சார வாரிய தொமுச செயலாளர் அ.சரவணன், கோவிந்தராஜ், சக்திநகர் செல்வராஜ், ஆறுமுகம், கருப்புசாமி, தண்டபாணி, கோபால், பால்ராஜ், நேருநகர் கிருஷ்ண சாமி, மற்றும் கழக நிர்வாகிகளும் தொழிலாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.