அரசியலில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து!

 


கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி கிராமத்தை சேர்ந்த 49 வயதான மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். 13 ஆண்டு காலமாக கோட்டூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வரும் இவர், விவசாயிகள், தொழிலாளர்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர்.


பி.காம் பட்டதாரியான மாரிமுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் அனைவருமே விவசாயக் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இன்றவளவும் இவரது மனைவி ஜெயசுதா விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறார். யாரிடமும் அதிர்ந்து பேசாத குணமுடையவர், வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் பணிவாக பழகும் குணாம்சம் கொண்டவர் என மாரிமுத்துவை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க...தஞ்சையில் இரவு நேர ஊரடங்கால் பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்... விவசாயிகள் வேதனை..

மாரிமுத்து தனது வேட்பு மனுவில் குடிசை வீடு, 58000 ரூபாய் கட்சிப் பணம், மனைவியிடம் சேமிப்பாக 1000 ரூபாய், 3 சவரன் தங்க செயின், 66 சென்ட் நிலம் உட்பட 3 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் தனது சொத்து மதிப்பு 20 கோடி ரூபாய்க்கு மேல் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

குடிசை வீட்டில் இருந்து சட்டமன்றத்திற்குள் நுழைய இருக்கும் மாரிமுத்துவின் வெற்றி வெகுஜன மக்களின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் திருத்துரைப்பூண்டி மக்களின் குரலாக ஒலிப்பேன் என்று மாரிமுத்து தெரிவிக்கிறார்.
Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
நிர்வாணப்படுத்தி டான்ஸ் ஆடச்சொல்லி மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர்... இந்தக் கொடுமை எங்கு தெரியுமா?
Image
ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு!!
Image
வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுகிறதா ?அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
Image
மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து ‘நான் கடவுள்’ பாணியில் காசி அகோரிகள் நடத்திய சடங்கு : பீதியை கிளப்பிய விநோத பூஜை!!
Image