தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்

 


  • கொரோனா பாதிப்பு மக்களை வதைத்து வரும் நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வேதனையான சம்பவம் அரங்கேறி வருகிறது.

  • ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ்கள் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல 6,000 ரூபாயை கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களிடம் வசூலிக்கின்றனர்.

  • பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால், ஆம்புலன்ஸில் ஒரு மணி நேரம் காத்திருக்க கூடுதலாக 2,000 ரூபாய் நிர்ணயிக்கின்றனர் என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.