வாணியம்பாடியில் 8 குழந்தைகளின் தந்தை(பாஜக பிரமுகர்) 10 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது.

 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி (47). இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் ஸ்டேட் தொழில் செய்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு  1 ஆண் 1பெண் குழந்தை உள்ள நிலையில் முதல் மனைவி இறந்ததால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு 2 பெண் பிள்ளைகள் பிறந்துள்ளது. இரண்டாவது மனைவி இவரை விட்டு  பிரிந்து சென்றதால் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்து உள்ளன.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு  ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக சென்னையில் இருந்த போது அங்கே ஜீனத் என்ற 2 குழந்தையின் தாய்யுடன் பழக்கம் ஏற்பட்டு அவர் கணவனை விட்டு விட்டு குழந்தைகளுடன் பாரதி உடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக  கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜீனத்துடன்  வீட்டில் முதல் மனைவியின் 2 குழந்தைகள், 2 வது மனைவி, 3 வது மனைவியின் குழந்தைகளுடன் ஜீனத்தின் முதல் கணவருக்கு பிறந்த 10 வயது மகள் மற்றும் மகன் ஆகியோர் ஒரே இடத்தில் உறங்கி  கொண்டு இருந்துள்ளார். 

அப்போது உறங்கிக்கொண்டு  இருந்த போது ஜீனத்தின் 10வயது வளர்ப்பு மகளை வன்கொடுமை செய்துள்ளார்

சம்பவம் குறித்து வளர்ப்பு மகள் அவரது தாயிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்ததின் பேரில் ஜீனத் வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அதன்  பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பாரதி(47) என்பவரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

வளர்ப்பு தந்தையை மகளை பாலியல் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தற்போது வரை4 மனைவியின்  பிள்ளைகள் 8 பேருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 6 பெண் குழந்தைகள் 2 ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.  5வது பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதான பாரதி பாஜக பிரமுகர் ஆவார்.

ஆப்பூர் நிருபர் : V. திருமலை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)