7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்பு

 


தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் இம்மாதம் 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்புவிழா நடைபெறும் என மு.க. ஸ்டாலின் தெவித்துள்ளார்.

இந்நிலையில், 24 முதல் 28 அமைச்சர்கள் வரை அப்போது பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைப்பெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது..

அத்துடன், 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போதுதான் முதல் முறையாக  மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக அரியணை ஏறவிருக்கிறார்.