கடன் கேட்ட விவசாயிடம், வங்கி மேளாலர் ரூ.50,000 லஞ்சம் கேட்பதாக புகார்

 


கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மேலூர் கிராமத்தில் உள்ள தண்டபாணி என்கின்ற விவசாயி நபார்டு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய ஆட்டுப்பண்ணை அமைப்பதற்காக அதே ஊரில் உள்ள யூனியன் வங்கியை அணுகியுள்ளார்.


ஏற்கனவே 15-ஆண்டுகளுக்கு மேலாக தண்டபாணி அதே வங்கியில் வரவு செலவு வைத்து கணக்கை சரியாக பராமரித்து வருவதோடு, ஏற்கனேவே இரண்டு முறை டிராக்டர் கடன் பெற்று சரியாக கட்டி வந்துள்ளார் என்பதை ஆய்வு செய்த வங்கி மேலாளர் முறையாக மத்திய அரசின் தொழிற்பயிற்சி மற்றும் தொழில் முனைவோருக்கான சான்று, திட்ட அறிக்கை மற்றும் நில பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து விட்டு பண்ணை அமைக்கும் பணியை துவக்குமாறும் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் தண்டபாணி வெளியில் தனிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி பண்ணை அமைத்துள்ளார். இதனிடையே பண்ணை அமைக்கும் பணிக்காக தவனை முறையில் கடன் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டபோதும், பணியை முடியுங்கள் கடன் தருவதாகவும் மேலாளர் கூறியுள்ளார். இதையடுத்து தண்டபாணி ரூ.28 லட்சம் வரை கடன் வாங்கி பண்ணையமைத்து ஆடுகளை வளர்க்க துவங்கியுள்ளார்.

இதனிடையே, தற்போது கடன் ஒதுக்கீடு செய்ய மானியத் தொகையில் 10 சதவீதமான ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும்  என தண்டபாணியிடம் மேலாளர் கேட்டுள்ளார்.

இதனால் மனம்தளர்ந்த விவசாயி தண்டபாணி, தான் வெளியில் வாங்கிய கடனுக்கே வட்டி செலுத்த முடியாத நிலையில் தனது நில பத்திரத்தையும் அடமானமாக பெற்றுக் கொண்டு ரூ.50 -ஆயிரம் லஞ்சம் கொடுக்காவிட்டால் இரண்டு லட்சம் மட்டுமே கடன் வழங்க முடியும் என கூறி வங்கி மேலாளர் தன்னை அலைக்கழிப்பதாகவும், வங்கி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து  தனக்கு பண்ணை கடன் வழங்காவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை தண்டபாணி வேதனை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் - எஸ்.செந்தில்குமார்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)