புதிய ரேஷன் கார்டு வழங்க ரூ.500 பணம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலர்! வைரலான வீடியோ

 


தமிழகம் முழுவதும் தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா நிவாரண நிதி  வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடும்ப அட்டை இல்லாத ஏராளமானோர் தற்போது புதிய அட்டை விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக வேலை பார்க்கும் சரவணன் என்பவர் புதிய குடும்ப அட்டை பெற்றுச் செல்ல அலுவலகத்திற்கு வந்த கோவிலூரை சேர்ந்த சங்கர் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் 500 ரூபாய் பணம் பெற்றதாகவும், அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பாலுபாரதி தட்டிக் கேட்டபோது, அவர் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டது போலவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் சரவணனை தொடர்பு கொண்டு கேட்டபோது மாவட்ட நிர்வாகத்தின் ஆணைப்படி, தான் கொடிநாள் நிதி மட்டுமே அவர்களிடம் வசூல் செய்ததாகவும், அதற்கு முறையான ரசீது உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், புதிய குடும்ப அட்டை வழங்குவதற்காக பொதுமக்களிடம் பணம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் விஜயலக்ஷ்மி உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் - சங்கர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)