இறந்தவர் பெயரில் போலியாக மருத்துவ சான்று தயாரித்து மோசடி - 3 பேர் கைது

 


இறந்தவர் பெயரில் போலியாக மருத்துவர் பரிந்துரை கடிதம் தயாரித்து ரெம்டெசிவர் மருந்து வாங்கும் முயன்ற சென்னையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை நேரடியாக மருத்துவரின் பரிந்துரை கடிதம், ஆர்.டி. பி.சி .ஆர் சோதனை சான்று சி.டி ஸ்கேன் சான்று, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து வாங்க வந்த மூவர் ஒரே மாதிரியாக தஞ்சாவூரில் உள்ள நேத்ரா சைல்டு கேர் என்ற மருத்துவமனை சார்பில் செல்வம் என்ற நபருக்கு Prescription எழுதி கொடுத்தது போன்று கடிதம் வைத்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த செல்வம் என்ற நபர் 7ஆம் தேதியே கொரோனா பாதிப்பில் உயிரிழந்தார் தெரியவந்தது.
அவர் வைத்திருந்த சான்றுகளும் கலர் ஜெராக்ஸ் என கண்டுபிடிக்கப்பட்டது அதை அடுத்து மூவரையும் கைது செய்து, பரிந்துரைக் கடிதம் யாரிடம் இருந்து கிடைத்த என விசாரணை நடத்தி வருகின்றனர்