பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடக்கம்!

 


திருச்சி மாநகராட்சி  கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் கொரோனா தடுப்புப் பணி குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, காஜாமலையில் உள்ளா பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,
கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனை மட்டுமின்றி என்.ஐ.டி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் 200 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு மற்ற எல்லா வசதிகளும் உள்ளன. ஆக்ஸிஜன் மட்டும்தான் பற்றாக்குறையாக உள்ளது. அதுவும் விரைவில் சரியாகி விடும்.  திருச்சி பெல் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வலியுறுத்தியுள்ளோம். தற்போது அவர்களே வெளியில்தான் வாங்கி வருவதாகவும்  ஒரு மாதத்திற்குள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாக கூறியுள்ளனர் என்றார்.

திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான200 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருந்துகளான கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் காலை 6 மணிக்கு வழங்கப்படும்.  அதைத் தொடர்ந்து வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, 8 வடிவ நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும்.

ஆரோக்கியமான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்பட இருக்கிறது. நோயளியின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகர்வுத் தன்மைக்கு ஓமப்பொட்டணம் , உடல்வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் கொடுக்கப்படும்.


மேலும் இவ்வளாகத்தில் மன கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சித்தா கொரோனா மையத்தில் நேரிடையாக அனுமதிக்கப்பட மாட்டாது.  திருச்சி அரசு   மருத்துவமனை வளாகத்திற்கு  சென்று பதிவு பெற்று பின்பு,  கொரோனா சித்தா புத்துணர்வு மையத்திற்கு அனைத்து பரிசோதனையின் முடிவுகளுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன்,  மாநகராட்சி தலைமை‌ பொறியாளர்  அமுதவள்ளி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்