2 ஆண்டுகள் காத்திருந்து கொலை செய்த மகன்கள்: பெண்கள் உட்பட 8 பேர் கைது!

 


தஞ்சாவூர்  மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஈச்சங்குடி புதுதெருவை  சேர்ந்தவர் பாலன். பூ வியாபாரியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாலனுக்கும் ஈச்சங்குடி எம்ஜிஆர் நகரை  சேர்ந்த விஜி என்கிற ராஜதுரை என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.


கடந்து 2019ஆம் ஆண்டு ஈச்சங்குடியில் வைத்து ராஜதுரையின் தந்தை சந்திரகாசனை  பாலனும் அவரது மகன் பாபுவும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவரது கட்டை விரல் துண்டானது. இதுகுறித்து பாலன் மற்றும் அவரது மகன் பாபு மீது கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தனது தந்தையின் விரலை வெட்டிய பாலனை கொலை செய்ய வேண்டும் என்ற முன்விரோதத்தில் ராஜதுரை  அடிக்கடி பாலனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் பாலன் ஈச்சங்குடியிலிருந்து குடும்பத்துடன் கும்பகோணம் அருகே சுந்தரப்பெருமாள் கோவில் பகுதிக்கு குடியேறி கபிஸ்தலம் கடைத்தெருவில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்  கபிஸ்தலத்தில் பூ வியாபாரத்தை முடித்துவிட்ட  வீட்டிற்கு செல்லும்போது, பாலனை கொலை செய்ய ராஜதுரை திட்டமிட்டுள்ளர்.அதன்படி நேற்று முன்தினம் கபிஸ்தலத்தில் பூ வியாபாரத்தை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சுந்தரபெருமாள் கோவில் நோக்கி பாலன் சென்றதை காரில் இருந்தபடி கண்காணித்த ராஜதுரை அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

கபிஸ்தலம் கும்பகோணம் சாலை உமையாள்புரம் ஸ்ரீ அம்மன் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது ராஜதுரை காரை கொண்டு  பாலனின் மோட்டார் சைக்கிளில்  மீது வேகமாக மோதியுள்ளார்‌. இதில் தூக்கி வீசப்பட்ட பாலன் படுகாயம் அடைந்தார். உடனடியாக காரை விட்டு இறங்கி சென்று பார்த்த ராஜதுரை மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர்கள் வினோத், ராஜ் என்கிற மரிய தாமஸ், பெர்னாண்டஸ் ஆகியோர் பாலன் இறக்கவில்லை என்பதை  அறிந்து தங்கள் காரில் வைத்திருந்த கம்பி மற்றும் கட்டையால் பாலனை பலமாக தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பாலனை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.இதுகுறித்து திருவையாறு இஞ்சிகொல்லையை சேர்ந்த  சரண் என்பவர்  பாலனின் மகன் பாபுவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாபுவும் அவரது அண்ணன் சதீஷ் ஆகியோர் உமையாள்புரம் பகுதிக்குச் சென்றபோது அங்கு பாலனின் மோட்டார் சைக்கிள் மட்டும் கீழே சரிந்து கிடந்துள்ளது.

இதையடுத்து , அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட பாலனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருவையாறு தாலுகா ஊத்தங்குடி அருகே சிறுபுலியூர் கிராமத்தில் உள்ள ஓடைக்கரையில் உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பாலன் பிணமாக கிடப்பதாக தகவல்கிடைத்துள்ளது.

அங்கு சென்ற போலீஸார்  பாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாலனை கொலை செய்தவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில்,   திருவையாறில் உள்ள உறவினர் வீட்டில் ராஜதுரையும் அவரது உறவினர்களும் மறைந்து இருப்பது தெரியவந்தது.  அங்கு சென்ற தனிப்படை போலீசார் பதுங்கியிருந்த  ராஜதுரை, ராஜூ என்கிற மரியதாமஸ் பெர்னாண்டஸ், வினோத் மற்றும் இந்த கொலைக்கு தூண்டுகோலாக இருந்த ராமன், கணேசன், கோமதி, சாந்தி, மங்கையர்கரசி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ராஜ் என்பவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!