திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் கே.குப்பன் EX.MLA அராஜகம்...

 விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடவில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கண்டித்த இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். படுகாயம் அடைந்த இளைஞர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சட்டமன்ற வேட்பாளர் கே.குப்பன் அவருடைய மகன் கே.கார்த்திக், கே.மோகன், பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர்களை கொலைவெறியோடு சராமாரியாக தாக்கியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் மற்றும் அவருடைய மகன்களே நேரடியாக கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது மிகப்பெரிய கண்டனத்திற்குறியது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை உடனடியாக கைது செய்யவேண்டும் இல்லை என்றால் திமுக சார்பில் நாளை மிகபெரிய போராட்டம் நடத்தப்படும்.