நகைகளை அடகு வைத்து கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மின் விசிறிகள் வழங்கிய தம்பதி!

 


கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர் அப்பகுதியில் ஒரு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் இன்று (ஏப்.27) சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றுள்ளனர். அப்போது வெயில் தாக்கத்தால் கரோனா நோயாளிகள் கடும் சிரமப்படுவதாக கேள்விப்பட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த சென்ற தம்பதியினர் சிறிது நேரத்தில் திரும்ப வந்து மருத்துவமனை முதல்வரிடம் கரோனா நோயாளிகளுக்கு மின்விசிறி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து மின்விசிறியை பெற வந்த முதல்வர் ரவீந்திரன் ஒரு டெம்போ முழுவதும் மின்விசிறி அடுக்கி வைத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து முதல்வர் ரவீந்திரன் அந்த தம்பதியினரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது, தான் மனைவி அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்து 2.20 லட்சம் ரூபாய்க்கு கரோனா நோயாளிகளுக்கு 100 மின்விசிறி வாங்கயிருப்பதாகத் தெரிவித்தனர். 

அதில் சில மின்விசிறிகளை பெற்றுக்கொண்ட முதல்வர் மீதமுள்ள மின் விசிறிகளை திரும்பக் கொடுத்து உங்களுடைய நகையை மீட்டு கொள்ளுங்கள் என முதல்வர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த தம்பதியினர் இந்த மின் விசிறி கரோனா நோயாளிகளுக்காக வாங்கி வரப்பட்டது. எனவே அவர்களுக்கு இது சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து முதல்வர் ரவீந்திரன் மாவட்ட ஆட்சியர் நாகராஜனை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார்.இவ்வளவு மின்விசிறிகளை சிரமத்துக்கு இடையே தரவேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதனை அந்த தம்பதியினரிடம் முதல்வர் தெரிவித்தும் தாங்கள் கொண்டு வந்த மின்விசிறியை திரும்ப எடுத்துச் செல்ல மாட்டோம் என பிடிவாதமாக இருந்தனர்.அதன் பின் அனைத்து மின் விசிறிகளையும் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் பெற்றுக்கொண்டார். 

கரோனா தடுப்பு ஊசி செலுத்த வந்த தம்பதியினர் கரோனா நோயாளிகளுக்காக அணிந்திருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து மின்விசிறி வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த தம்பதியினர் மின்விசிறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தங்களுடைய விபரம் ஏதும் வெளியே தெரியக்கூடாது என அன்புக் கட்டளையிட்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!