ரிசல்ட் நெகட்டிவா? ஆனாலும் இந்த கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக இருக்காதீர்கள்..!

 கொரோனா வைரஸ் 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழலில் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என முன்களப் பணியாளர்களும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநில மக்கள் கவலைப்படவில்லை என கூறும் அவர்கள், வைரஸின் தீவிரத்தை மக்கள் உணர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட ரிசல்ட் நெகட்டிவாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும் என கூறும் மருத்துவர்கள், தங்கள் உடம்பில் வெளிப்படும் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா அறிகுறி இருந்து ரிசல்ட் நெகட்டிவாக வந்திருக்கிறதா? : கொரோனா 2வது அலையில் லேசான மற்றும் கடுமையான கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் மக்கள் பலரும் பி.சி.ஆர் டெஸ்டை எடுக்கின்றனர். கொரோனாவை உறுதிப்படுத்தும் சோதனையாக கருத்தப்படும் இந்த பரிசோதனையில் அறிகுறி இருக்கும் பலருக்கும் நெகட்டிவ் ரிசலட் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நோயின் ஆரம்ப நிலையை பி.சி.ஆர் டெஸ்ட் தெளிவாக காட்டுவதில்லை என்றும், மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் வீரியம் தென்படுவதில்லை என்றும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதனால், கொரோனாவை உறுதிப்படுத்தும் சோதனையாக கருதப்படும் பி.சி.ஆர் டெஸ்ட் மீது பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது. ஒரு சில சமயங்களில் தவறாக கூட நெகடிவ் ரிசல்ட் கொடுக்கப்படலாம் அல்லது வரலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றர்.

துல்லியமாக கோவிட் டெஸ்ட் எடுக்கப்படுகிறதா? : ஒரு சில சம்பவங்களைத் தவிர கோவிட் வைரஸ் பாதிப்பை பி.சி.ஆர் டெஸ்ட் மூலம் கண்டறியப்படுகிறது. ஆனால், புதிய கொரோனா வைரஸ் மியூட்டேஷன் ஆன பிறகு கொரோனா டெஸ்டில், நெகட்டிவ் என பரவலாக வருவதாக கூறப்படுகிறது. வைரஸ் உடலில் நிலை கொண்டிருப்பது முதல் கவனக்குறைவாக ஏற்படும் தவறு வரை என இதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தவறாக நெகடிவ் ரிசல்ட் வருவதற்கான காரணம் : புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை, வழக்கமாக எடுக்கப்படும் பி.சி.ஆர் டெஸ்ட் கண்டுபிடிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. திரிபு அடைந்த வைரஸ் பி.சி.ஆர் டெஸ்டில் தென்படாதபோது, அறிகுறி இருப்பவர்களுக்கும் நெகடிவ் ரிசல்ட் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், உடலில் சாம்பிள் (Samples) முறையாக எடுக்கப்படவில்லை என்றாலும் கொரோனா பரிசோதனை நெகட்டிவாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரிசல்ட் நெகட்டிவ், அறிகுறிகள் உள்ளதா? : ரிசல்ட் நெகட்டிவாக வந்தாலும், உங்கள் உடலில் கோவிட் வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். ரிசல்ட் நெகட்டிவாக வந்துவிட்டது என்று கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம். நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கும்போது உங்களையும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் பாதிக்கும். உங்கள் உடலில் தோன்றும் அறிகுறிகளை கவனித்து உரிய சிகிச்சை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

சுவை மற்றும் வாசனை இழப்பு : சுவை இழப்பு மற்றும் வாசனை இழப்புகளை நீங்கள் எதிர்கொண்டால் கோவிட் வைரஸ் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அசாதாரண அறிகுறிகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் வருவதற்கு முன்பு கூட இந்த அறிகுறி உங்களுக்கு ஏற்படும். நீண்ட காலமாக இருக்கும் இந்த அறிகுறி கோவிட் வைரஸில் இருந்து நீங்கள் விடுபட்ட பிறகும் கூட தொடர வாய்ப்புகள் உள்ளன.

காய்ச்சலுடன் குளிர் : கோவிட் வைரஸ் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று காய்ச்சல். காய்ச்சல் இருக்கும் அதே வேளையில் குளிரும் இருக்கும். மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது கட்டுப்படாமல் தொடர்ந்து குளிர் காய்ச்சல் இருந்தால் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

சோர்வு : காய்ச்சல், இருமல் ஆகியவற்றுடன் சேர்ந்து கோவிட் வைரஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு சோர்வு அதிகளவில் இருக்கும். சோர்வு என்பது வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறி. கோவிட் வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு ஏற்படும் சோர்வை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

தொண்டைப் புண் : தொண்டைப் புண் பலருக்கும் காய்ச்சலின்போது வரக்கூடிய இயல்பான அறிகுறி என்றாலும், கோவிட் வைரஸ் இருப்பவர்களுக்கு தொண்டைப் புண் வலி மிகக் கடுமையாக இருக்கும். அதிகமான வலி மற்றும் இருமல் ஆகியவை சேர்ந்து இருந்தால் கோவிட் வைரஸ் அறிகுறியாக இருக்கும் என்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்

குமட்டல், வாந்தி : கோவிட் வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் பலருக்கும் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் இருக்கிறது. இந்த அறிகுறி இருப்பவர்களும் இயல்பாக எடுத்துகொள்ளாமல் கோவிட் வைரஸ் குறித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

கோவிட் ரிசல்ட் நெகட்டிவாக வந்த பிறகும் அறிகுறி இருந்தால் என்ன செய்வது? : கோவிட் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவாக வந்தபிறகும் அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் யாருடனும் தொடர்பில் இருக்க வேண்டாம். 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்கு சென்று கோவிட் டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். அறிகுறிகள் கடுமையாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் சி.டி.ஸ்கேன் எடுத்து உங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்