பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்

 


சென்னை- பூந்தமல்லியை இணைக்கும் ஈ.வெ.ரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது. இதனையடுத்து தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.


சென்னையில் இருந்து மேற்கு பகுதிகளை இணைப்பதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்டிற்கும் பூந்தமல்லிக்கும் இடையே சாலை உருவாக்கப்பட்டு அதற்கு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் 1979-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த சாலைக்கு ஈ.வெ.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்தார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் வைத்த பெயருக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலேயர்கள் வைத்த கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன அறிக்கையை விடுத்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட பெயர் பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயரை மட்டும் கருப்பு மை பூசி அழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்

மண்டலப் பொறியாளர் விளக்கம் அளித்தார். அதில், “ கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயர் மட்டுமே நெடுஞ்சாலைத்துறை ஆவணங்களில் உள்ளது. அதனால் அந்த பெயரை கொண்டே பதாகை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மட்டுமே அது ஈ.வெ.ரா பெரியார் சாலை என அழைக்கப்படுகிறது” என்றார்.


Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image