கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை எடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் முடிவு. அதுபோல தமிழக எல்லையில் தமிழக அரசு ஏற்படுத்துமா?
தமிழக கேரளா எல்லைப்பகுதியில் கேரளாவிற்குள் நுழைய அம்மாநில அரசு கேரளா எல்கையில் கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து அம்மாநிலத்தற்குள் வருவோரை கொரோனா பரிசோதனை செய்து,செய்த பதினைந்து நிமிட காலத்திற்குள்(Positive, Nagative) முடிவினை சொல்லி விடுகிறார்கள்.
ஆனால்,தமிழக எல்கைக்கு வருவோரை தமிழக அரசின் சுகாதாரத் துறையினர் அவர்களது உடலின் வெப்பநிலை அளவினை (டெம்பரேச்சர்)மட்டுமே பரிசோதனை செய்து அனுப்பப்படுகிறார்கள்.
மாறாக,கேரளா அரசைப்போல
தமிழக எல்கையில் தமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை முகாம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா அரசைப் போல தமிழக அரசும்,தமிழக எல்கைக்கு வருவோரை கொரொனா முகாம் அமைத்து பரிசோதனை செய்து பத்து நிமிடத்திற்குள் காலதாமதமில்லாமல் முடிவினை சொல்ல பரிசோதனை முகாமினை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்