"முகக்கவசத்தாலேயே உடைக்க முடியும் ”கொரோனா தடுப்பு பரவலின் சங்கிலியை - சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன்!

 


மக்கள் கொரோனா தடுப்பு மருந்து குறித்து கவலைபடமால், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் நடிகர் விவேக் மற்றும் அவரது நண்பர்கள் கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறை செயலர் முன்னிலையில் செலுத்தி கொண்டனர்.

தொடர்ந்து தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று இந்தியா முழுவதும் இரண்டு லட்சம் பேருக்கும் தமிழ்நாட்டில் 7,819 பேருக்கும் தொற்று பதிவாகி உள்ளதாக கூறிய அவர், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு லட்சமாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தடுப்பூசி திருவிழா தொடங்கி உள்ளதாக கூறிய அவர் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

பொதுமக்கள் சரியான முறையில் தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்காக சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்வி இயக்குனரக அலுவலகங்களில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கொரோனா எண்ணிக்கையை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்ற அவர், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மொழிப்பெயர்க்க நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என்றார்.

தற்போது மழைக் காலம் என்பதால் மின்சாரம் ஜெனரேட்டர் ஆக்சிஜன் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்து கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

கொரோன மருந்து மட்டுமல்லாமல் குறைந்தது 3 மாததிற்கான 120 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் மக்கள் மருந்து குறித்து கவலைப்படமால், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

கொரோனா இது ஒரு இயற்கை பேரிடர்,  முகக்கவசம் மூலமே இந்த தொற்றின் தொடர் சங்கிலியை உடைக்க முடியும் என்றார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக், கோவிட் தொற்றை எதிர்ப்பதற்கான தடுப்பூசியை நானும் என் நண்பர்களும் செலுத்தி கொண்டோம். தனியார் மருத்துவமனையை காட்டிலும் அரசு மருத்துவமனைகள் தான் மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குகிறது.

அதனால் தான் அரசு மருத்துவமனையில் செலுத்தி கொண்டதாக கூறிய அவர் அரசின் அறிவுறுதல்களான மாஸ்க் அனிவது, அடிக்கடி கை கழுவது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டாலும் நாம் சமூக பாதுகாப்புடன் இருக்க வேண்டும், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)