ஊரடங்கு; என்னென்ன இயங்கும், என்ன இயங்காது? முழு விவரம்!


 தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 25ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்தது. நோய்த் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 12-ம் தேதி தலைமைச் செயலர். அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கில் என்னென்ன இயங்கும், எதெற்கெல்லாம் அனுமதி:

1. அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம்/இரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

2. தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூட்டங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

3. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

4. பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

5. தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றது.

இரவு நேர ஊரடங்கில் என்னென்ன இயங்காது, எதெற்கெல்லாம் அனுமதி கிடையாது:

1. தனியார், பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகத்துக்கு அனுமதியில்லை.

2. வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் (இரவு 10 மணி முதல் காலை 4மணி வரை) செயல்பட அனுமதி கிடையாது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!