செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை

 


கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அன்படி, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூரில் உள்ள வீடு மற்றும் அவரின் சொந்த கிராமமான இராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீடு என 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

அத்துடன் சபரீசனின் நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகினற்னர்.

இந்நிலையில், ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வருமான வரித்துறை அதிகாரிகள் எனது மகள் செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதற்கு ஒருபோதும் திமுகவினர் பயப்படமாட்டோம். 

நாங்க பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்றும் நான் கலைஞரின் மகன் எனவும் கூறியிருந்தார்.
Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image