தமிழகத்தில் தலைதூக்கும் கண்டெய்னர் கலாச்சாரம்!!..

 


தமிழகத்தில் ஆங்காங்கே வாக்கு எண்ணும் மையம் முன்பு கண்டெய்னர் லாரி நிறுத்தப்படுவது வாடிக்கையாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் கண்டெய்னர் நிறுத்தப்படும் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளதாக அரசியல் கட்சிகளிடையே ஐயப்பாடு எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் திட்டக்குடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரத்தை அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு , பொள்ளாச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வாக்கு எண்ணும் மையம் முன்பு நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தன் பெயரில் பெயர் காவல்துறையினர் அந்த லாரியை ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று நிறுத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி கண்டெய்னர் லாரியை திறந்து ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனை ஏற்ற கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.