உத்தரவை மீறி வழிபாட்டு தலங்கள் செயல்பட்டால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை - எஸ்.பி., விஜயகுமார் எச்சரிக்கை

 அரசின் உத்தரவு மீறி வழிபாடு தளங்கள் செயல்பட்டால் சம்ந்தப்பட்ட வழிபாடு தளம் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் எச்சரிக்கை.

வாணியம்பாடி ஏப் 25 : கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய் குமார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் மற்றும் சுட்டறு வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜப்ரபாத் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இசுலாமியர்கள் தொழுகை நடத்தி கொண்டு இருந்தனர். 

இதனை கண்ட போலீசார் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு நேற்று இரவு அனைத்து வழிபாடு தளங்கள் மூட உத்தரவு பிரபித்துள்ளார். இந்நிலையில் நீங்கள் எப்படி தொழுகை நடத்தி கொண்டு இருக்கின்றீர்கள் என்றார். அதற்க்கு ஜமாத் நிர்வாகிகள் இத்தகவல் குறித்து எங்களுக்கு தெரியவில்லை. 

ஆகையால் தொழுகை முடிந்துடன் அடுத்த மறு உத்தரவு வரும் வரை பள்ளிவாசல்களில் கூட்டாக தொழுகை நடத்த மாட்டோம் என்றனர். இதனை தொடர்ந்து தொழுகைக்கு வந்த பல இசுலாமியர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 


அரசின் உத்தரவு மீறி வழிபாடு தளங்கள் செயல்பட்டால் சமந்தப்பட்ட வழிபாடு தளம் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்தார்.