வடமாநிலங்களில் ஏற்பட்ட அவலம் - திருவிழா கொண்டாட சொல்லும் மோடி!:“சடலங்களை எரிக்க சுடுகாடுகளில் இடமில்லை”

 இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 1.5 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டி பதிவாகிறது. வட மாநிலங்கள் பலவற்றில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையேதான் தடுப்பூசி திருவிழா கொண்டாட அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இறந்தவர்களின் உடலை எரியூட்டக்கூட சுடுகாடுகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டு திறந்தவெளியில் எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.குஜராத் மாநில பா.ஜ.க அரசு, கொரோனா இறப்புகளை குறைவாக குறிப்பிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சூரத் நகரில் உள்ள முக்கிய சுடுகாடுகளில், கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு சராசரியாக 80 சடலங்கள் வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சூரத் நகரத்தில் திறந்தவெளியில் சடலங்கள் எரிக்கப்படும் காட்சி சமூக தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகன மேடைகளில் இடம் கிடைக்காததால் இந்தக் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்து, பிணவறைகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன. இவற்றை தகனம் செய்து முடிக்கும் முன் அடுத்தடுத்து சடலங்கள் வருவதால் மருத்துவப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கொரோனாவால் உயிரிழந்த 100க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டுள்ளன. சுடுகாடுகளே இடமின்றித் திணறும் அளவுக்கு கொரோனா உயிரிழப்பு அதிகரித்திருப்பது மக்களை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்