பெண்களை லத்தியால் தாக்கும் வீடியோ: எஸ்ஐ கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்...

 கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகின்றார். நேற்று இரவு அவரது உணவகத்திற்கு வந்த ஓசூரை சேர்ந்த 5 பெண்கள் தங்களுக்கு மிகவும் பசிப்பதாக கூறியதை அடுத்து, உணவகத்தின் ஷட்டரை பாதி அளவு அடைத்துவிட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த காட்டூர் உதவி ஆய்வாளர் முத்து, உணவகத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களை லத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் வெளியான நிலையில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ், காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பேருந்து நிலைய பகுதிகளில் இரவு 11 மணி வரை உணவகம் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்று விதி உள்ளபோதும், முன்னதாகவே கடையை அடைக்கும்படி சொன்னதுடன், பெண்கள் என்றும் பாராமல் லத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Image