இப்போது தெரியாமல் திருடுகிறார்கள்” : மத்திய அரசு குறித்து புலம்பிய விஜயபாஸ்கர்!

 



இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக எடுத்து வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுட்ட நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

அதேவேளையில் கொரோனா நோயாளிக்கு பெரிம் தேவையாக இருந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.

அதேவேளையில் நிலைமை கைமீறி போன சூழலில் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதே மத்திய அரசு தான் கொரோனா தீவிரத் தன்மையை உணராத மோடி அரசு கடந்த 2020-2021ம் நிதி ஆண்டில் முதல் 9 மாதங்களில் மட்டும் 9, 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டரை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது.

இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால், 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்குஅனுப்பும் வேளையை தற்போது பா.ஜ.க மோடி அரசு செய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில், 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது, மத்திய அரசு இத்தகைய முடிவை, தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு எந்தவித ஆலோசனையும் மாநில அரசுடன் நடத்தவில்லை. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிற மாநிலங்களுக்கு உதவது என்பது முக்கியம் தான். ஆனால் தமிழகத்திலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக நீட், புதிய கல்விக்கொள்கை, ஜி.எஸ்.டி போன்ற மாநில உரிமைகளை தெரிந்து திருடிய மோடி அரசு, தற்போது பெருந்தொற்று காலத்தில் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் ஆக்சிஜனை தெரியாமல் திருடிவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)