ஆசிரியர்களால் திடீர் சர்ச்சை..வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ள அறையில் இருந்து கூட்டம்


 திருவள்ளூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே உள்ள அறையில் இருந்து கூட்டம் கூட்டமாக ஆசிரியர்கள் வெளியே வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூரை அடுத்துள்ள பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவொற்றியூர், மதுரவாயல், மாதவரம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே, அந்த கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு எடுப்பதாகக்கூறி 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த திமுக காங்கிரஸ் மற்றும் உள்ளிட்ட இதர கட்சியினர் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், உடனடியாக அவர்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி அதற்கான உரிய பதிலை அளிக்க வேண்டும் என திமுக மற்றும் அனைத்து கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துசாமியிடம் கேட்டபோது...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கு எதிரில் உள்ள கட்டடத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக 150 ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் 3 அடுக்கு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுப்பப்படுவதாகவும், இரும்பு தகடுகளாலான தடுப்புகள் நாளை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இதில், குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் விளக்கம் அளித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)