ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு-இந்தப் பூக்கள் ரமலானில் மட்டும் பூக்கும்!

 


1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றவரல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: புகாரி)

2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: நஸாயி)

3) நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: நஸாயி)

4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(ஆதாரம்: நஸாயி)

5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 (ஆதாரம்: நஸாயி)

விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது ”வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்” இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே, அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை கடைபிடிப்போமாக!

ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸுப்ஹுடைய) பாங்கிற்கும் ஸஹர் உணவிற்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ் (ரலி) அவர்கள் கேட்டதற்கு, ஐம்பது ஆயத்து ஓதும் அளவென்று விடையளித்தார்கள்.

 (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை, பிற்படுத்துவது சுன்னத்தாகும், அதாவது ஸஹர் உணவிற்கும் சுப்ஹுடைய பாங்கிற்;கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது சுப்ஹுடைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாது.

ஸஹர் உணவு  ஓர் அற்புதமே!

அது சாப்பிடும் நேரமும் கிடையாது!

அந்த நேரத்தில் சாப்பாடு இறங்கவும் செய்யாது!

ஆனால் அந்த நேரத்தில் குடிக்கும் 2  கிளாஸ் தண்ணீர் 25 கிளாஸ்  அளவுக்கு சக்தியை தந்து 14 முதல் 16 மணி நேரம் வரை  தாக்கு பிடிக்கிறது என்றால்....

சிறிது சாப்பிடும் சோறோ அல்லது மற்ற உணவுகளோ 14 முதல் 16 மணி நேரம் வரை  தாக்கு பிடிக்கிறது என்றால்....

இதோ இறைத் தூதரின் கட்டளை! 

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 1923


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)