ஆக்ஸிஜனை தடுத்தால் தூக்கில் போடுவோம்- ஐகோர்ட் நீதிபதிகள் ஆவேசம்..

 


கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இதைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்பிடலில் ஆக்ஸிஜன் பற்றாகுறையாக நோயாளிகள் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா இரண்டாவது அலையில் 54.5 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்நிலையில் டில்லியில் ஆக்ஸிஜன் தேவை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 480.மெட்ரிக் டன் தேவைப்படும் நிலையில் 290 மெட்ரிக் டன் மட்டுமே தேவைப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் பலர் இறக்க நேரிடும் எனக் கூறப்பட்டது.

மக்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க தடையாக இருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் அவர்களைத் தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். ஆக்ஸிஜன் இறக்குமதிக்காக கலால் வரியை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.