ஆட்டோ டிரைவருக்கு கார் வாங்கிக் கொடுத்து உதவிய நடிகை சமந்தா

 



தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோருடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். 1987-ம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புலாவில் பிறந்த சமந்தா சென்னை 
பல்லாவரத்தில் தான் வளர்ந்தார். ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்ற அவர் 2010-ம் ஆண்டு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.

திரைப்படங்களைத் தாண்டி ‘சாம் ஜாம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா. இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனக்கு 7 சகோதரிகள் இருப்பதாகவும் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் குடும்பத்தைக் காப்பாற்றவே ஆட்டோ ஓட்டி வருவதாகவும் சமந்தாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தனக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை கேட்டு தெரிந்து கொண்ட சமந்தா உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

சொன்னபடியே அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.12.5 லட்சம் செலவில் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் சமந்தா. 7 சகோதரிகள் உடன் குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வந்த ஏழை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா செய்த மிகப்பெரிய உதவி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)