ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி.யின் கார் கண்ணாடி உடைப்பு

 


போடிநாயக்கனூர் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை பார்வையிட சென்ற தேனி எம்.பி‌யும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்வெல்வத்தின் மகனுமான ஓ.பி‌.ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போடிநாயக்கனூர் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை பார்வையிட சென்ற தேனி எம்.பி‌யும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்வெல்வத்தின் மகனுமான ஓ.பி‌.ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பனினீர்செல்வம் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் இடங்களை தேனி எம்.பி., ரவீந்திரநாத் பார்வையிட சென்றார்.

அவர், போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாளகவுண்பட்டி கிராமத்திற்குச் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரவீந்திரநாத்துடன் சென்ற அதிமுகவினரும் அவர்களுடன் பதில் வாக்குவாதம் செய்ததால் ஒருவொருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டதால் ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் ஓ.பி‌.ரவீந்திரநாத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனிடையே கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image