மறைந்த நடிகர் விவேக் பற்றி ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை

 


கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரிடம் மட்டுமல்லாது மக்கள் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் க்ரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி சுமார் 33 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்த விவேக் தனது 1 கோடி மரக்கன்றுகள் நடும் கனவை எட்டிப்பிடிக்கும் முன் இந்த உலகை விட்டு மறைந்தார். 

இதையடுத்து மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் விவேக்கின் உடல் தமிழக காவல்துறையினரின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் மரணம் குறித்து உருக்கமாக கவிதை வடித்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

  •  ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை

நடிகர் ராஜ்கிரண்




ராஜ்கிரண் விவேக்கிற்காக எழுதிய கவிதை:

தம்பி விவேக்,
அண்ணா அண்ணா என்று
என்னை வாய் நிறைய அழைத்த
போதெல்லாம்,
அன்பைத்தேடிப்போனாய்
அறிவைத்தேடிப்போனாய்
பண்பைத்தேடிப்போனாய்
எல்லாவற்றையும் என்னால்
புரிந்து கொள்ள முடிந்தது,
மகிழ்ச்சியாய் இருந்தது...
இப்பொழுது,
தாயைத்தேடிப்போனாயோ
தனயனைத்தேடிப்போனாயோ
யாரை நம்பிப்போனாயோ
எதையுமே என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை,
மனம் தவிக்கிறது...
என்ன நினைத்து என் மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும்,
என் அறிவு, உன் இழப்பை
ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது...” இவ்வாறு முடிவடைகிறது ராஜ்கிரணின் கவிதை

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்