மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை..

 


கொரோனா வைரஸ் பரவல் 2-வது அலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மாநில சுகாதார அமைச்சர்களுடன் சனிக்கிழமை(இன்று) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளேன். அதன்பிறகு வரும்திங்கள்கிழமை நாடு முழுவதும் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

கடந்த ஆண்டு நமது நாட்டில் போதுமான பாதுகாப்பு கவச உடைகள், வென்டிலேட்டர்கள், என்95 முகக்கவசங்கள் இல்லை. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே தன்னிறைவை எட்டினோம். முதல் கொரோனா வைரஸ் அலையை தடுத்தது போன்று 2-வது அலையையும் வெற்றிகரமாக தடுப்போம்” என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா