திமுக பிரமுகர் மீது கடும் தாக்குதல்..ஆர்.கே.நகரில் வன்முறை..

 


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளராக எபிநேசர் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக ஆர்.எஸ்.ராஜேஷ் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளரான ஆர்.எஸ்.ராஜேஷ், தனக்கு வாக்குகளை ஈர்க்கும் நிர்வாகிகளுக்கு அள்ளித் தருகிறார் என்றும் ஆர்.கே.நகரில் பணமழை பொழிகிறது என்றும் வெளிப்படையாகவே அனைவரும் பேசிவந்தனர்.


இந்தநிலையில், வாக்குப்பதிவு நாளான இன்று மாலை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 38வது வட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுகவினருடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிமுகவினர் தாக்கியதில் திமுக பிரமுகர் ஒருவர் மயக்கமடைந்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தாக்குதலில் மயக்கமடைந்த அவரை திமுகவினரும் போலீசாரும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.