விவசாயிகளுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது; சம்யுக்த கிஸான் மோர்ச்சா விவசாய அமைப்பு அறிக்கை..

 


டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜக எம்.பி. பர்வேஸ் வர்மா நேற்று முன்தினம் கூறுகையில், ‘‘டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வரும் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தடுக்கின்றனர். இதனால், ஆக்சிஜன் சிலிண்டர்களை டெல்லிக்கு எடுத்து வரமுடியவில்லை’’என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘டெல்லிக்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களை விவசாயிகள் தடுக்கவில்லை. எங்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 

போராட்டத்தின் முதல் நாளில் இருந்தே அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்களுக்கு வழிவிட்டுதான் போராடுகிறோம். ஒரு ஆம்புலன்சையோ அத்தியாவசிய சேவைக்கான வாகனத்தையோ நாங்கள் தடுக்கவில்லை.

மனித உரிமைகளுக்கு தான் விவசாயிகள் போராடுகின்றனர். ஒவ்வொரு மனிதனின் உரிமைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)