தூத்துக்குடியில் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவாட்ஸ் அப் புகைப்படத்தால் கைதான வாலிபர்

 


தூத்துக்குடி, திரவியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரனின் மகன் மணிகண்டன். இவர் தனது 19வது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜா, ஜெயகணேஷ், அதிர்ஷடலிங்கம், யுவராஜா ஆகியோருடன் சேர்ந்து பெரிய கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.


கத்தியால் கேக்கை வெட்டுவது போன்ற புகைப்படத்தை வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸாக வெளியிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளரிடம் உடனடியாக விசாரணை மேற்கொண்டு கைது செய்ய உத்தரவிட்டார்.

எஸ்பி உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மீனா வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, கேக் வெட்ட பயன்படுத்தப்பட்ட வாள் போன்ற நீண்ட கத்தியையும் பறிமுதல் செய்தார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பட்டாக்கத்தி, வாள் போன்றவற்றால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் போக்கும் இளைஞர்களிடம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. சிலநேரங்களில் இத்தகைய செயல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் காரணமாகி விடுவதால், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ மற்றும் வீடியோக்களாக இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மற்றும் வதந்திகள் பரப்புவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)