ஒரத்தநாடு வைத்தியலிங்கத்துக்கு எதிராக போர்கொடி தூக்கும் பா.ஜ.க நிர்வாகி


 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரும், இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். ஆனால், பரப்புரை செய்யும் போதும், தேர்தல் தொடர்பான பணிகளிலும் கூட்டணி கட்சிக்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை என்று பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நம்முடைய செய்தியாளர் குருநாதன், பாஜகவின் தெற்கு மாவட்ட அறநிலைதுறை மற்றும் கலை இலக்கிய பேரவை செயலாளர் வினோத்வுடன் தொலைபேசி மூலம் கேட்கையில், ஒரத்தநாடு தொகுதியில் பாஜகவுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை என்றும், அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கத்தின் மகன், தங்களை மரியாதை குறைவாக பேசுவதாகவும் தெரிவித்தார். இதனால், மாற்று கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

ஆனால், அதிமுகவினர் மற்றும் அக்கட்சியின் வேட்பாளர் வைத்தியலிங்கம், தங்களுக்கு உரிய மரியாதை அளிப்பதாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். 


மேலும், தனிப்பட்ட முறையில் அதிமுக மிது வினோத் புகார் கூறுவதாகவும் தெரிவித்தார்.

பாஜகவினரின் குற்றச்சாட்டு குறித்து அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்தை தொடர்பு கொண்டபோது, அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்