குடும்ப உறுப்பினர் ஒருவரை பலிகொடுத்த சில மணிநேரங்களிலேயே இளம் காவல்துறை அதிகாரி ஒருவர்

 


கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் டெல்லி கடுமையாக சூழலை எதிர்க்கொண்டுள்ளது. அங்கு மருத்துவ ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்க இயலாமல் மருத்துவமனைகள் தினந்தோறும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.


இதன் காரணமாக ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகள், கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் என போர்க்கால அடிப்படையில் மருத்துவ கட்டமைப்புகளை அரசு நிர்மானித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெற்கு டெல்லியில் உள்ள சத்தார்பூர் பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். இம்மையத்தின் கட்டுமான பணியை காவல்துறை உதவி ஆணையர் லக்‌ஷய் பாண்டே என்பவர் பொறுப்பேற்று கவனித்து வந்தார். இந்நிலையில் உதவி ஆணையர் லக்‌ஷய் பாண்டேவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று அதிகாலை உயிரிழந்த நிலையில் அவரின் உடலை எரியூட்டும் நேரத்தில் கூட குடும்பத்தினருடன் இருக்காமல் தனது கடமையை செய்வதற்காக வந்துள்ளார்.
2018ம் ஆண்டு பேட்ச் DANIPS அதிகாரியான லக்‌ஷய் பாண்டே, டெல்லியில் உள்ள மெக்ராலி சரக காவல் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மைத்துனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மருத்துவமனை ஒன்றில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகத்தினர் நேற்று காலை உயிரிழந்தவரின் உடலை பாண்டேவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உடலை காசியாபாத்தில் அடக்கம் செய்வதற்காக சென்று அங்குள்ள நீண்ட வரிசையில் டோக்கன் பெற்று காத்திருந்த போது காவல் அதிகாரி பாண்டேவுக்கு கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கும் பணி குறித்த நிகழ்நேர அறிக்கையை உயரதிகாரிகள் கேட்டுள்ளனர். மேலும் டெல்லியில் தற்போது முழு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் அவருடைய பகுதியில் ஊரடங்கு அமல் குறித்தும் தகவல்கள் கேட்டுள்ளனர், இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட பாண்டே கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் பணியை நேரில் சென்று பார்த்து விரைவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக காவல் அதிகாரி பாண்டே கூறுகையில், என்னுடைய மைத்துனர் கடந்த மாதம் தான் துபாயில் இருந்து வந்தார், அவருக்கு கொரோனாவிற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன என்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம் இருப்பினும் சோதனையில் நெகட்டிவ் என வந்தது. திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் GTB மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம். அவருக்கு பிளாஸ்மா , ரெம்டெசிவிர் தேவை என்பதால் அதனையும் ஏற்பாடு செய்து தந்தோம். திடீரென அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அதிகாலை அவரின் உயிர் பிரிந்தது.

அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக காத்திருந்த போது எனக்கு பணி குறித்த அழைப்புகள் வந்தன. கடமை முக்கியம் என்பதால் குடும்பத்தினரை விட்டுவிட்டு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை துரிதப்படுவதற்காக சென்றேன். பின்னர் எனது பகுதியில் ஊரடங்கு பணிகளை கண்காணிக்க ரோந்து சென்றேன் இவ்வாறு பாண்டே தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்