பண விநியோக விவகாரம்; போலிஸாரை மிரட்டிய அமைச்சர்- கோவில்பட்டியில் பரபரப்பு!

 


கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அ.தி.மு.க கிளை செயலாளரை விடுவிக்குமாறு அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜூ போலிஸாரை அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (46). இவர் அப்பகுதி அ.தி.மு.க கிளை செயலாளராக உள்ளார். இவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.புதுக்கிராமம் முகமது சாலிகாபுரம் பகுதிக்கு வந்த அ.ம.மு.கவினர் சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த ஆரோக்கியராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஆரோக்கியராஜை காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.அப்போது அங்கு வந்த அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆரோக்கியராஜை விடுவிக்குமாறு காவல்துறையிடம் தகராறு செய்தார். ஆனால் அவரை விடக்கூடாது என அ.ம.மு.கவினர் காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான போலிஸார் அவர்களை விலக்கி விட்டு, ஆரோக்கியராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். வாக்குக்கு பணம் விநியோகித்தவரை விடுவிக்குமாறு அ.தி.மு.க அமைச்சரும் கோவில்பட்டி அ.தி.மு.க வேட்பாளருமான கடம்பூர் ராஜூ தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)