மதுரை அரசு மருத்துவமனையின் அட்டூழியம்!

 


நல்ல சிகிச்சை வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள். பணம் கொடுத்தால் நன்றாக கவனிக்க முடியும் எனக் கூறி பணம் பெறும் காட்சிகள் வெளியானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை மதுரையில் 22, 658 பேருக்கு கொரானா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் 22, 158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரானா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரத்தில் மதுரையில் 569 பேர் தொற்று பாதிக்கப்பட்டதால் அவற்றை தடுக்கும் பணியில் மதுரை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 84 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அதிகாரிகள் மாநகராட்சியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனையின்படி, மூன்று பேருக்கு மேல் ஒரு வீட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த வீட்டை இரும்பு தகரத்தால் மூடுவது என்றும், ஒரே தெருவில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த தெருவையே தகரத்தால் மூடுவது என்றும், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை மாநகராட்சி சார்பில் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் விளாங்குடி, கே.கே.நகர், மீனாட்சி நகர், திருப்பாலை, சம்பங்குளம், டெப்டி கலெக்டர் காலனி உள்ளிட்ட 18 பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பாதிப்பு மூன்று பேருக்கும் மேல் உள்ள வீடுகளில் தகரத்தால் மூடுவது உள்ளிட்ட பணிகளில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் தற்போது ஈடுபட்டு வருகிறது. 100 வார்டுகளிலும் கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி நிர்வாகம், நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும், சுத்தம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதாகவும், படுக்கை வசதி இல்லை எனவும் அனைத்து நோயாளிகளும் தரையில் தான் படுக்க வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கூட வழங்குவதில்லை என்பதால் 3 பேர் வரை இறந்திருக்கிறார்கள். இந்நிலையில், சுகாதார ஊழியர்கள் நோயாளிகளிடம் நல்ல சிகிச்சை வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்றும் இல்லையென்றால் பணம் கொடுங்கள் என்றும் கூறி பணம் பெற்று வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)